பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப்படிப்பு மாணவர்கள் அப்போலோ மருந்தகங்களை பார்வையிட்டனர்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக. 11- திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், காட்டூர் மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அப்போலோ மருந்தகங்களை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிபிவின் இயக்குநர் பேராசிரியர் இராஜேஷ், துணை இயக்குநர் முனைவர் விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ரத்தினா, திரிஷ்யா, தினேஷ், சேதுராஜா மற்றும் அன்சா ஆகியோர் வழிகாட்டுதலில் இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் 4 குழுக்களாக பிரிந்து 10.082026 அன்று பார்வையிட்டனர்.

இதில் மருந்தகங்கள் அமைப்ப தற்கான உரிமங்களை பெறுதல், மருந்து, மாத்திரைகளை கணினி யுகத்திற்கு ஏற்றாற்போல் வரிசைப் படுத்துதல், மருந்துகள் அதன் தன்மைக்கேற்ப பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல், விற் பனை முறைகள் போன்ற மருந்தாளு நர்கள் அறிந்து கொள்ளக்கூடிய அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்து கொண் டனர். இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை மற்றும் திருச்சி மாவட்ட அப்போலோ மருந்தக துணை பொது மேலாளர் டி.வேணுகோல் ஆகியோருக்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரி வித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *