மதுரா, ஆக. 10- கிருஷ்ண ஜென்ம பூமி என்று அறிவித்து, அதனை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று (9.8.2026) காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9 ஆம் தேதி கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி ஏராளமானோர் நேற்று (9.8.2026) மதுராவுக்குச் சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மதுரா முழுவதும் காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர். நான்கு முக்கிய இந்து மதத் தலை வர்கள் உள்பட பலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷாயி ஈத்கா மசூதிக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. யாகத்தில் பங்கேற்ற மதத் தலைவர்கள் கூறும்போது, “கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வரும் டிசம்பர் 6 ஆம் தேதி மீண்டும் கர சேவைக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அயோத்தி ராமர் கோயில் போன்று, மதுராவிலும் பெரியதொரு கிருஷ்ணர் கோயிலைக் கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வரவழைத்து இருக்கிறோம். எங்களது கிருஷ்ண ஜென்ம பூமி இயக்கம், நாடு தழுவிய இயக்கமாக மாறும்” என்றனர்.
மதுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ்குமார் கூறும்போது, “மதுரா நகருக்குள் புதியவர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர சேவைக் காக மதுராவுக்கு வந்தவர்களைக் கண்ணியமாகப் பேசி திருப்பி அனுப்பியுள்ளோம். மதுரா எல்லை களில் தடுப்புகளை அமைத்து அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதுரா முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை” என்றார்.
