தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரை, ஜூலை 23-  தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு ஆலோசிக்கலாம் என தெரிவித்து இதுகுறித்து அரசு அதிகாரிகள் வரும் 28-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளர்கள், கடுமையான மாதவிடாய் வலியால் சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாமே, இதில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்களும் பயன்பெறும் வகையில் உரிய முடிவு எடுக்கலாமே என கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக அதிகாரிகள் 28-ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *