புதுடில்லி, ஆக.9 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்துகோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், அமித்ஷா அவைக்கு வர மறுத்து வருகிறார்.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும், அவர்களின் உணர்வுகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைக்குமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு மாநிலங்க ளவைத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 6 அன்றுகூறி இருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி மாநிலங்கள வைக்கு அமித்ஷா வர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அத்தகைய உத்தரவு எதையும் சி.பி.ராதாகிருஷ்ணன் பிறப்பிக்கவில்லை என்று கிரண் ரிஜிஜு மழுப்பியுள்ளார். மேலும் அவைக்கு எந்த அமைச்சர்வர வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்ய முடியாது என அராஜகமாகப் பேசி உண்மையான கோரிக்கையை திசை திருப்பியுள்ளார்.
ஜூலை 20 அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய பிறகு அமித்ஷா இரு அவைகளிலும் இன்னும் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு வரும் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பயந்து கொண்டுஅவைக்கு வருவதில்லை என விமர்சனங்கள் எழுந் துள்ளன.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மீது மிகக் கொடூரமான முறையில் டில்லி காவல்துறையும், மத்தியகாவல்படையும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டன. அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படைகளின் மிருகத்தனமான தாக்கு தல் நடவடிக்கைகளுக்கு அவர் நாடா ளுமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில்அமித்ஷா அவை பக்கம் வராமல் ஓடுகிறார் என கடுமயான விமர்ச னங்கள் எழுந்துள்ளன.
