‘‘நாட்டின் சுதந்திரத்துக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்யவில்லை” : காங்கிரஸ் தலைவர் கார்கே

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஹல்த்வானி, ஆக.9- நாட்டின் விடுதலைக்காக பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ எதையும் செய்யவில்லை என்றும், ஆனால் அவர்கள்தான் தேசபக்தி பற்றி தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தராகண்ட்டின் ஹல்த்வானி யில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, “இன்றைய நாள் ஒரு ‘‘புனிதமான’’ நாள். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த நாளில்தான் காந்தியார் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். செய் அல்லது செத்துமடி என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

இதன் காரணமாகவே நாட்டு மக்கள் ஒன்று திரண் டார்கள். நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் அச்சத்துக்கு உள்ளானார்கள். முடிவில், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் நாட்டை விட்டு வெளி யேறினார்கள். இதில், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் அதே நாளில் இதே இடத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உத்தராகண்ட் தேவபூமி என்று அழைக்கப்படுகிறது. இது வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்பெற்ற நிலமும்கூட. நமது ராணுவத்தில் உள்ள குமோன் ரெஜிமெண்ட், கார்வால் ரெஜிமெண்ட் குறித்து முழு நாடும் நன்கு அறியும். நாட்டின் முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் இந்த மண்ணின் மைந்தர்தான். எனவே, நாட்டைக் காப்பவர்கள் நாங்களே என நீங்கள் பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டுக்காக எதையும் செய்ததில்லை. நாட்டின் சுதந் திரத்துக்கு அவர்களின் பங்களிப்பு எதுவுமில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவராவது சிறை சென்றிருக்கிறாரா? பாஜக ஆதரவாளர்கள் ஒருவராவது சிறை சென்றிருக்கிறார்களா? ஒரு சிலர் சிறை சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். இது தான் வரலாறு. இருந்தும் அவர்கள் தேசபக்தி குறித்து தொடர்ந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், நாம்தான் உண்மையான தேச பக்தர்கள். அவர்கள் கட்சி மாறியவர்கள். எனவேதான் காங்கிரஸ் கட்சியை; காங்கிரஸ் கட்சியினரை யாராலும் அச்சுறுத்த முடிவதில்லை. உத்தராகண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி விரைவில் அமையும்” என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *