‘மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு’ புதிய சட்டத்தை கண்டித்து கெஜ்ரிவால் கருத்து

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.8- ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள சமூக ஊடகச் சட்டம், அரசுக்கு எதிரான விமர்சனங்களை நசுக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. இது, அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கி விட்டார் என்பதையே காட்டுகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று (7.8.2026) நடைபெற்ற ஆம்ஆத்மி கூட்டத்தில் கெஜ்ரிவால் கூறியதாவது: மோடி அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக ஊடகத் தளமாக இருந்தாலும், ஒரு பதிவு அல்லது காட்சிப் பதிவை நீக்கு மாறு அரசு கோரினால், அதை 3 மணி நேரத்திற்குள் அந்த நிறுவனம் நீக்க வேண்டும். அண்மையில் இளைய தலை முறையினர் நடத்திய போராட்டங்கள் மற்றும் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு பிரதமர் மிகவும் கவலையடைந்துள்ளார். பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களைக் கண்டு பயப்படுகிறார்; இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார். ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அச்சத்தில் மூழ்கியுள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *