ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு! இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்!

3 Min Read

உதயநிதி ஸ்டாலின் பேசாததைப் பேசியதாக செய்தி வெளியிட்ட
வட இந்தியத் தொலைக்காட்சிகள்மீது

சென்னை, ஆக.08– எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசாததைப் பேசியதாக திரித்து செய்தி வெளியிட்ட ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தித் தொகுப்பாளர் அக்ஷிதா நந்தகோபால் & என்டிடிவி (‘NDTV 24×7’) தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் செய்தித் தொகுப்பாளர் சிவ அரூர் ஆகியோர் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்குரைஞரின் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவதூறு பரப்பியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 100 கோடி ரூபாய் இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு வழங்கப் படும் என்றும் அந்த தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சியிலும், அதன் யூடியூப் பக்கத்திலும் ஒளி பரப்பப்பட்ட விவாத நிகழ்ச்சிகளில், தஞ்ஞாவூரில் நடைபெற்ற விவசாயி களுக்கு ஆதரவான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையைத் திரித்து, தவறான மற்றும் அவதூறான கருத்துகள் வெளியிடப் பட்டுள்ளது.

அவர் தனது உரையில் எந்த ஒரு தனிநபரையோ, நடிகை திரிஷாவையோ சுட்டிக்காட்டிப் பேசவில்லை அப்படி இருக்கும் போது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக செய்தித் தொகுப்பாளர் அக்ஷிதா நந்த கோபால் தவறான அர்த்தம் கற்பித்துள்ளார்.

அதேபோல என்.டி.டி.வி. செய்தித் தொகுப்பாளர் சிவ அரூர், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டக் கூட்டத்தில் சிலர் எழுப்பிய முழக்கங்களை உதயநிதி ஸ்டாலினின் அவர்களின் கருத்தாக ஜோடித்து, அதை இரட்டை அர்த்த ஆபாசப் பேச்சாக தவறாக சித்தரித்துள்ளார். சிவ அரூர் அவர்கள் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் (X/Twitter) திமுக, திமுக தலைவர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக அருவருப்பான சொற்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக தனிப்பட்ட பகை உணர்வை வெளிப்படுத்தி வந்துள்ளது ஆதாரங்களுடன் தாக்கீதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எந்த இடத்திலும் நடிகை த்ரிஷாவின் பெயரையோ, முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ பேசாத நிலையில், என்டிடிவி விவாத நிகழ்ச்சியில் அவர்களது புகைப்படங்களை ஒளிபரப்பி, அவதூறான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் மீது சுமத்தியுள்ளது திட்டமிட்ட சதிச் செயல் என அந்த தாக்கீதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டப்பூர்வ தாக்கீது கிடைத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியா டுடே தொலைக்காட்சி மற்றும் என்டிடிவி 24×7’ தொலைக்காட்சி அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு பரப்பும் வகையில் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட காட்சிப் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற் பெயருக்குக் களங்கம் ஏற் படுத்தியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அந்த தொகையானது காவிரி குருவை சாகுபடியால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு முழுமை யாக வழங்கப்படும் என அந்த வழக்குரைஞரின் தாக்கீதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கெடுவுக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், இந்தியா டுடே நிறுவனம் மற்றும் செய்தித் தொகுப்பாளர் மீதும், என்டிடிவி 24×7’ நிறுவனம் மற்றும் அதன் செய்தித் தொகுப்பாளர் மீதும் கிரிமினல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *