”மூடநம்பிக்கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்” முனைவர் சு.ஆறுமுகம் நூல்கள் வெளியீட்டு விழா

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 8- பணிநிறைவுபெற்ற ஆசிரியரும் நன்னிலம் ஒன்றிய கழகச் செயலாளருமான முனைவர் சு.ஆறுமுகம் எழுதிய, “மூடநம்பிக்கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்” மற்றும் “நெறிபட வாழ்தலே அறம்” என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவினை, 27.07.2026 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை, எழும்பூர் பெரியார் திடல், ‘அன்னை மணியம் மையார் அரங்கில்’, புதுமை இலக்கியத்தென்றல் (ம) பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகிய இணைந்து நடத்தியது.

அஞ்சி சாவதா வாழ்க்கை?

விழாவில் புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையாற்றினார். அவ்வுரையில் நீட் தேர்வு குறித்து விடுதலை நாளிதழில் வெளிவந்த ஆசிரியரின் அறிக்கையை வாசித்தார். நூலாசிரியர் ஆறுமுகம் தொடக்கத்தில், ‘அஞ்சி சாவதா வாழ்க்கை?’ என்ற பாடலைப் பாடினார்; பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வாழ்த்துரை மடல் அனுப்பியிருந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக தம் வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் பெரியார் போராடினார். அவற்றிற்கு தாம் கடும் எதிரி என்றும், மனிதனுடைய மூளையிலே விலங்கிடப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர் அவர்கள் மனிதன் அய்ந்து போதைகளுக்கு அடிமைப்பட்டுள்ளான், அவை குறித்து திராவிடர்கழகம் செயல்திட்டம் ஒன்றை வடிவமைத்து பிரச்சாரப்பணி மேற்கொள்ளும் என தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

புதுமை இலக்கியத்தென்றல் பொருளாளர் மு.இரா. மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

மூடநம்பிக்கைகள் பலவிதம்…

நூலாசிரியரின் “மூடநம்பிக் கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்” என்ற நூலை வெளியிட்டு திறனாய்வு கருத்துரை வழங்கிய பெரியாரிய நெறியாளர் முனைவர் த.ஜெயக்குமார் நூலாசிரியரின் முனைவர்பட்ட வழிகாட்டி நெறியாளர் ஆவார். நூலாசிரியர் ஃபால்கன் டைம்ஸ் இதழில், “இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என் ஜன்னலுக்கு வெளியே ஆகிய தொடர்களை எழுதிவந்ததை நினைவூட்டி பத்திரிகையில் எழுதுவது வேறு ஆய்வேடு உருவாக்குவதுவேறு என்று வழிகாட்டுதல் செய்ததை நினைவுகூர்ந்து நூலாசிரியரிடம் புதிய நூல் படைக்கும் ஆற்றல் அன்றே வெளிப்பட்டதை கண்டு வியந்தேன் என பாராட்டிப் பேசினார்.

நெறிபட வாழ்தலே அறம்

“நெறிபட வாழ்தலே அறம்” என்ற நூலை வெளியிட்டு திறனாய்வு கருத்துரை வழங்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை மேனாள் தலைவர் பேரா. முனைவர் உ.பிரபாகரன், “இந்த இடத்தில் இந்த இரண்டு நூல்களை வெளியிடுவது மிகப்பொருத்தமானதாகும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடியதாக உள்ளது, பள்ளிக்கூடங்களில் மொழிப்பாடங்களில் துணைப்பாடங்கள் உண்டு அதற்கு மிகவும் தகுதியானது இந்நூல், மாணவர்களிடம் இன்று நல்லொழுக்கம் குறைந்துவிட்டது, குறிப்பாக சினிமா போதை நடிகர்களை ஆராதிப்பது. மதுபோதை, பொதுவெளியில் பெண்களிடம தவறாக நடந்துகொள்வது, பாலியல் வன்புணர்ச்சி, சினிமாவில் தந்தையிடம் மகன் மரியாதை குறைவாக பேசுதல் போன்ற செயல்கள் இன்றைய நாளில் காணப்படுகின்றது. இந்த நூல் இத்தகைய சூழலில் வெளியிடுவது சிறப்பானது. குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படிக்கவேண்டும்” என்று கூறினார்.

நன்னெறிகளை
கதைகள் வாயிலாக…

வாழ்த்துரை வழங்கிய திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “நெறிபட வாழ்தலே அறம் என்ற நூலை எனது மாமியாரும், வாழ்விணையரும் மாறி, மாறி படித்து பாராட்டினார்கள், காரணம் நூலாசிரியர் தான் சொல்லவந்த கருத்தை எளிய வாசகர்களை சென்றடையும் விதமாக உரிய விளக்கப் படங் களுடன் சொன்னதுதான், வட்டாரத்தையொட்டி நன்னெறிகளை கதைகள் வாயிலாக சொல்வது சிக்கனமாக இருப்பது குறித்து ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். கிரெடிட் கார்டில் வாங்குகின்ற கடனை கட்ட மீண்டும் கடன் வாங்குகின்றோம், உணவு உண்டபின் கை கழுவச் செல்கின்ற பெரியாருக்கு சிறுவன் ஒருவன் ஏராளமான தண்ணீரைக் கொட்டுகின்றான், இதே தண்ணீர் நெய்யாக இருந்தால் இவ்வளவு அதிகமாக ஊற்றுவாயா? என கடிந்துகொண்டார், உதவிசெய்தல், நன்றி பாராட்டுதல், முதியவர்க்கு உதவி செய்தல், அன்பு, உயிர்களை நேசித்தல், கதைகள் வாயிலாகச் சொல்லுதல், அவரவருடைய நம்பிக்கை என்று மூடநம்பிக்கையை விட்டு விட்டால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு இருக்கமுடியாது, நரபலி ஒழிக்கப்பட்டு இருக்காது, குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டு இருக்காது. சரியான அரசாக இருந்தால் இடுக்குப் பிள் ளையார் பாதையை அடைத் திருக்கவேண்டும். உயிர்ப் பலி ஏற்பட்டபிறகும் ஊடகங்கள் அதை வைரல் செய்கின்றன என்றார்.

குழந்தைகளிடம் பகுத்தறிவுக் கருத்துகள்

ஏற்புரை வழங்கிய நூலாசிரி யர் முனைவர் சு.ஆறுமுகம், தான் சிறுவயது முதலே மூடநம்பிக்கை செயல்களில் இருந்ததை அப்போதும் (ம) இப்போதும் தனது வாழ்வியல் சம்பவங்களை எடுத்துக்கூறி விளக்கினார். மேலும் குழந்தைப் பருவத்திலேயே தாய்மார்கள் பகுத்தறிவுப் பழக்கவழக்கங்களை கற்பித்து வளர்க்கவேண்டும். அது பெண்கள் கையில்தான் உள்ளது. பகுத்தறிவுதான் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்றும் பெரியாரின் கருத்துகளை அப்படியே எடுத்துச் சொன்னால் படிப்பவர்களுக்கு கடினமாக இருக்கும். அதையே கதையாக அல்லது இதர வாழ்வியல் சம்பவங்களோடு இணைத்துச் சொன்னால் சிறப்பாக இளைஞர்கள் விரும்பி படிக்கும் வகையில் சொல்லவேண்டும். இதுகுறித்த விசயத்தில் ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்தவேண்டும். குறிப்பாக இதுகுறித்து எழுதுகின்ற இளைஞர்களை மாவட்டந்தோறும் இனங் கண்டு அவர்களை நமது பத் திரிகைகளில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர மாவட்டந்தோறும் தொடர்ச்சி யான போராட்டத்தை நடத்தவேண்டும் என்றார். முடிவில் பொறியாளர் ஆ.தமிழ்ச் செல்வன் நன்றிகூற விழா இனிதே நிறைவுற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *