தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆளுநா் அர்லேகருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்!

3 Min Read

சென்னை, ஆக.7 தமிழ்நாட்டில் ஆளுநா் பங்கேற்கும் பல் கலைக்கழகங்கள் மற்றும் அரசு விழாக்களில் தொடா்ந்து 3-ஆவது இடத் துக்கு தள்ளப்பட்டுப் புறக் கணிக்கப்படும் ’தமிழ்த்தாய் வாழ்த்துக்கு’ முன்னுரிமை வழங்கக் கோரி ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 21 தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அர் லேகருக்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனா்.

இது தொடா்பாக டில்லியில் செய்தியாளா்களிடம் விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல். அதைத் தொடா்ச்சியாகப் புறக்கணிப் பதும், நிகழ்ச்சிகளின்போது 3-ஆவது இடத்துக்குத் தள்ளுவதும் மிகவும் தவறான நடைமுறை. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களை மீண்டும், மீண்டும் செய்ய வேண்டாம் என்று ஆளுநருக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். இத்தகைய செயல்பாடு தமிழ் மொழிக்கும் தமிழ் பண் பாட்டுக்கும் இழைக்கப்படும் பெரும் அவமானமாகும். எனவே, தமிழ் மாநிலப் பாடலை அவமதிப்பதைக் கைவிடுமாறு ’இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி யுள்ளோம்’ என்றார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநா் மாளிகை உத்தரவின்படி முதலில் ’வந்தே மாதரம்’, இரண்டாவதாக ’தேசிய கீதம்’, மூன்றாவதாகவே ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஆளு நருக்கு எழுதிய கடிதத் தில், தமிழ்த்தாய் வாழ்த் தான ’நீராரும் கடலுடுத்த’ பாடலை இயற்றிய மனோன் மணியம் சுந்தரனார் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது தமிழ்நாட்டு மக்களுக்கும் அவருக்கும் நோ்ந்த மன வருத்தமாகும் என்று குறிப்பிட் டுள்ளனா்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநா் உரையாற்றியபோது, தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறை வில் தேசிய கீதமும் பாடப்பட்ட நல்லிணக்க நடை முறையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் சுட்டிக் காட்டி யுள்ளனா்.

கருநாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில பாடலை விழாவின் தொடக்கத்திலும், தேசிய கீதத்தை நிறைவிலும் பாடும் நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டைக் குறைக்காது என்றும் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குறிப் பிட்டுள்ளனா்.

ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் ’இண்டி’ கூட்டணி யில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஒன்றிய அமைச்சா் ப. சிதம்பரம், பி. மாணிக்கம் தாகூா், வி. வைத்திலிங்கம், மருத்துவர் எம்.கே. விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, பி. கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், கே. கோபிநாத், பிரவீண் சக்கரவா்த்தி, சசிகாந்த் செந்தில், சி. ராபா்ட் புரூஸ், ஆா். சுதா, கிறிஸ்டோபா் மாணிக்கம் ஆகிய 13 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் அதன் தலைவா் தொல். திருமாவளவன், டி. ரவிகுமார் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்) சார்பில் கே. சுப்பராயன், வி. செல்வராஜ் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் சு. வெங்கடேசன், ஆா். சச்சிதானந்தம் ஆகி யோரும் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) சார்பில் துரை வைகோவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (அய்யுஎம்எல்) சார்பில் கே. நவாஸ்கனியும் கையொப்பமிட்டுள்ளனா்.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவில் தேசிய கீதத்தையும் பாடுவதை உறுதி செய்ய ஆளுநா் மாளிகை தெளிவான வழி காட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *