காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, ஆக.6- மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங் களுக்கு பெட்ரோல், டீசல் மறுக்கும் பரிசோதனைத் திட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4.8.2026 அன்று உத்தரவிட்டது

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிக்க தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதி மன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் ஒன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமா்வு, ஏராளமான வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லை என்பதை தீவிரமாக கவனத்தில் கொண்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 8 ஆண்டுகளுக்குக் கடந்துவிட்டபோதிலும், இந்திய சாலைகளில் பயணிக்கும் சுமார் 56 சதவீத வாகனங்கள் காப்பீடு இல்லாமல் உள்ளன என்று அந்த அமா்வு அதிருப்தி தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியதாவது: தற்போது புதிய கார்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டு காலம் 3 ஆண்டுகளாகவும், புதிய இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டு காலம் 5 ஆண்டுகளாகவும் உள்ளன. இதை புதிய கார்களுக்கு 4 ஆண்டுகளாகவும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளாகவும் அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து உரிய உத்தரவுகளை காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆா்டிஏ) உடனடியாக வெளியிட வேண்டும்.

பெட்ரோல் விற்பனை நிலையங் களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதுடன் வாகனங்களுக்கு காப்பீடு உள்ளதா, இல்லையா என்ற நிலவரத்தை இணைக்கும் பரி சோதனை திட்டத்தை உருவாக்க, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையுடன் அய்ஆா்டிஏ ஆலோசனை நடத்த வேண்டும். இதன்மூலம், மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப மறுக்கலாம் . இதை தானியங்கி வாகன பதிவெண் அடையாள (ஏஎன்பிஆா்) கேமராக்களை பயன் படுத்தி செய்யலாம். இது வாகன உரிமையாளா்களிடம் உரிய காப்பீடு இருப்பதை உறுதி செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *