செப். 8 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் பேரவைத் தலைவர் அறிவிப்பு!

சென்னை, ஆக. 6- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர், கூட்டத்தொடரின் முக்கிய விவரங்கள் மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாத அட்டவணையை வெளியிட்டார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (6.8.2026) காலை 9.30 மணிக்கு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அன்றைய நாளே நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 8, 9 விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10 முதல் 12 வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 12 அன்று விவாதத்திற்கு நிதியமைச்சர் பதிலளிப்பார். ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெறும்.

செப்டம்பர் 7-ஆம் தேதி நடை பெறவுள்ள உள்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல மைச்சர் விஜய் பதிலளித்து உரை யாற்றுவார்.

செப்டம்பர் 8-ஆம் தேதி பொதுத் துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் விவாதத்திற்குப் பின் பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நிகழ்வுகள் முழுவதும் நேரடி யாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் களின் இருக்கை மாற்றம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த பேரவைத் தலைவர், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் அந்த கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவர் என்றும், தனிச் சின்னத்தில் வென்றவர்களுக்குத் தனியாகப் பேச அனுமதி வழங்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி பழனிசாமிதான் அதிமுக சட்ட மன்றக் குழுவின் தலைவராக உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *