புதுடில்லி, ஆக.6 நாட்டில் அதிகரித்து வரும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance – AMR) சவாலை எதிர்கொள்ளும் வகையில், நுண்ணு யிர் கொல்லி மருந்துகளுக்குத் (Antibiotics) தனித்துவமான நீலப் பட்டை குறியீடு (Blue Strip) வழங்குவதைக் கட்டாயமாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களவையில் இது தொடர் பாக எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்கள்:
நீலப் பட்டை குறியீடு: நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணவும், அவற்றின் முறையற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, விவேகமான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மருந்துகளின் பேக்கிங்கில் ‘நீலப் பட்டை’ குறியிடும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இதற்காக மருந்து விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிவிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்: நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல உத்திசார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ‘தேசிய செயல் திட்டம் 2.0’-இன் கீழ் மனிதர்கள், விலங்குகள், உணவு மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்துத் துறைகளிலும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் நுகரப்படும் அளவைக் கண் காணிக்கும் அமைப்புகள் வலுப் படுத்தப்பட்டுள்ளன.பொது விழிப்புணர்வு: மருத்துவத் துறை யிலும் சுகாதார அமைப்புகளிலும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைச் சரியான அளவில், தேவையான போது மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
