குளிர்ச்சியில் வரப்போகும் திடமான புரட்சி

1 Min Read

கடந்த ஏழு ஆண்டுகளாக, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிரிஜ், ‘ஏசி’, போன்றவற்றின் தொழில்நுட்பத்தை அடியோடு மாற்ற முயன்று வந்தனர். குறிப்பாக, புவி வெப்பமடைதலைத் தூண்டும் பசுமைக் குடில் வாயுக்கள் இன்றி இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகளை உருவாக்குவதுதான் அவர்களது நோக்கம். அண்மையில் அதில் வெற்றியடைந்து, அதை வர்த்தக ரீதியில் தயாரிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வழக்கமான குளிர்சாதனப் பெட்டிகளில் வாயுக்கள் சுருக்கப்படுவதன் வாயிலாக குளிர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஆனால், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள், திடப்பொருள்களைப் பயன்படுத்தி குளிர்ச்சியை உருவாக்கியுள்ளனர். ‘பாரோகலோரிக்’ என்ற  தன்மை கொண்ட திடப் படிகங்களை அழுத்துவது, பின் விடுவிப்பது ஆகிய இரு செயல்களின் வாயிலாக வெப்பமாற்றம் நிகழ்கிறது.

அதாவது, அழுத்தம் அதிகரிக்கும்போது வெப்பமடையும் இப்பொருள்கள், அழுத்தம் குறையும்போது குளிர்ச்சியைத் தருகின்றன. இதில் வாயுக்கள் பயன்படுத்தப்படாததால், கசிவு ஏற்படும் அபாயமோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ இல்லை.

மின்சாரமும் இதற்கு அதிகம் தேவையில்லை. தவிர, பிரிஜ், ‘ஏசி’, போன்றவற்றின் மோட்டார் ஏற்படுத்தும் சப்தம் இதில் இருக்காது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தும் குளிர்பதனக் கருவிகள் வீடுகளுக்கு வந்துவிடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *