ஆகஸ்ட் 12-இல் முழு சூரிய கிரகணம்

2 Min Read

2026ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏற்பட உள்ளது.  இந்திய நேரப்படி இரவு 9.04  முதல் 13 ஆம் தேதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03-க்குள் நிகழும். இந்த கிரகணம் 2024-க்கு பின் உலகில் தெரியும் முழு சூரிய கிரகணம் ஆகும். இரவில் ஏற்படுவதால் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது.

முழு சூரிய கிரகணம்

இயல்பாக பூமிக்கும் சூரிய னுக்கும் இடையில் ஒரே நேர்க் கோட்டில் சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம் (Solar Eclipse) ஆகும். சூரிய கிரகணம் ஆண்டுக்கு இரண்டு முதல் அய்ந்து முறை நிகழும் வானியல் நிகழ்வாகும். பூமி உருண்டையாக இருப்பதால் கிரகணம் ஏற்படுவதை அனைத்துப் பகுதியிலிருந்தும் பார்க்க முடியாது.

சந்திரனின் மறைப்பால் பூமியிலிருந்து பார்க்க சூரியன் பகுதியாகத் தெரிவது பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) எனப்படும். நிலவு முழுவதுமாகச் சூரியனை மறைத்து நிலவின் நிழல் மட்டும் பூமியில் விழும் நிகழ்வு முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) எனப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்சம் 3-4 நிமிடம் வரை மட்டுமே முழு சூரிய கிரகணம் நிகழும். அதுவும் அதிகபட்சமாக 140 கி.மீ பரப்பு வரை மட்டுமே இதைக் காண முடியும். அதைத் தாண்டிய பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் மட்டுமே தெரியும். இதற்குக் காரணம் சூரியனை ஒப்பிட நிலவு மிக சிறியதாக இருப்பதும் நிலவுக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் மிக மிக அதிகமாக இருப்பதுமே ஆகும்.

ஆகஸ்ட் 12

1999-க்கு பின் அய்ரோப்பிய பகுதியில் ஆகஸ்ட் 12 அன்று முழு சூரிய கிரகணம் முதன்முறையாக ஏற்படப் போகிறது. இந்த கிரகணம் 2 நிமிடம் 18 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். இந்நேரத்தில் முழுவதுமாக இருள் சூழ்ந்து இரவாகக் காட்சியளிக்கும். ஆர்டிக் கடல், கிரீன்லாந்து, அய்ஸ்லாந்து, போர்ச்சுக்கல் என வடக்கு ஸ்பெயின் வரை மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து முடியும். இப்பகு தியில் இந்நிகழ்வை காணலாம்.

முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற அடுக்கு (கொரோனா) தெரியும். அடுத்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் 2034இல் ஜம்மு பகுதியில் தெரிய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி பார்க்கலாம்?

நம் பகுதியில் இந்நிகழ்வு தெரியாது என்பதால் நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால் இந்நிகழ்வை இணைய நேரலை வழியாக காண முடியும். நேரடியாக பார்க்கும் போது கண்டிப்பாக சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.

ISO 12312-2 தரச் சான்று பெற்ற கண்ணாடி அல்லது சூரிய வடிப்பான் கண்ணாடி (Solar filter) அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும். இவை சூரியனில் இருந்து வரும் சூரியப் புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்களைத் தடுத்துப் பார்வையைக் காக்கும். தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பார்த்தாலும் இவற்றை அணிவது அவசியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *