புதுடில்லி, ஆக.5 டில்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித் தீப்கே, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து எழுப்பியுள்ள கேள்வி பாஜகவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி மாணவர் போராட் டத்தைத் தொடர்ந்து, “அபிஜித் தீப்கே அமெரிக்காவில் படிக்க எப்படி பணம் கிடைத்தது? அவர் வெளிநாட்டு நிதி மூலம் போராட்டத்தை நடத்துகிறார்” என பாஜகவினர் சமூக ஊடகங் களில் குற்றஞ்சாட்டினர்.இதனைத் தொடர்ந்து, ஆர்.டி.அய். ஆர்வலர் அமித் திவாரி என்பவர், அபிஜித் தீப்கேவின் தந்தையும், ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளருமான பகவான்ராவ் தீப்கேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரி புகார் அளித்தார். மாத ஊதியம் $60,000 – 65,000$ ரூபாய் வாங்கும் ஒருவரால் மகனை அமெரிக்காவிற்கு எப்படி அனுப்ப முடிந்தது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த அபிஜித் தீப்கே கூறியிருப்பதாவது: “பாஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக் கடன் மூலமே எனது உயர்கல்வி சாத்தியமானது. கடன் தவணையை நான் தான் இப்போது திருப்பிச் செலுத்த வேண்டும். சாதாரணக் குடும்பத்து பையன் உயர்கல்வி கற்பதில் பாஜகவுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? ‘‘நான் எனது கல்விச் சான்றிதழையும், உதவித்தொகை பெற்ற சான்றிதழையும் காட்டத் தயார். அதேபோல உங்கள் ‘பேரரசர்’ தன் உண்மையான டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா? என் வீட்டிற்கு அமலாக்கத் துறை (ED) விசாரணைக்கு வந்தால் வரவேற்பேன்;
ஆனால் பிரதமர் தனது பட்டச் சான்றிதழைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.” அர சியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இப்போதைக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை; இதை ஒரு மக்கள் இயக்கமாகவே கொண்டு செல்ல விரும்புகிறோம். வாக்குகள் திருடப்படும் சூழலில் கட்சி தொடங்கி என்ன பயன்? காலையில் ஒருவருக்கு வாக் களித்தால் மாலையில் வேறொரு வரின் அரசு அமைகிறது. ஈ.டி. சி.பி.அய். மூலம் கட்சிகள் உடைக் கப்படுகின்றன.
வங்கதேசம் மற்றும் நேபாள போராட்டங்களுடன் தங்களை ஒப்பிடுவதற்குக் கண்டனம் தெரிவித்த அபிஜித் தீப்கே “நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். உலகிற்கே போராட்ட உத்வேகம் அளித்த காந்தியார் பிறந்த நாட்டில், நாம் வெளிநாடுகளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
“ஒவ்வொரு தேர்தலிலும் கல்வியே முதன்மை அஜெண்டா வாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வைத்திருக்கும் அரசு, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் விதிகளைக் கார ணம் காட்டுகிறது. “அரசு கோரிக்கைகளை நிறைவேற் றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனக் எச்சரித்த அவர், Gen-Z தலைமுறையினர் பாஜக தலைவர்களைப் போலத் தரம் தாழ்ந்து பேசாமல், கண் ணியத்துடன் செயல்பட வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
