பருவமழை தாமதம்! ஜூலை மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்வு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 4- நாட்டில் ஜூலை மாதத்தில் இயல்பை விடக் குறைவாக மழை பெய்ததன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களின் பயன்பாட்டுத் தரவுகளின்படி கடந்த ஆண்டு ஜூலையில் 31.4 லட்சம் டன்களாக இருந்த பெட்ரோல் விற்பனை, இந்த ஆண்டு ஜூலையில் 9.7 சதவீதம் அதிகரித்து 34.5 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஜூன் மாத விற்பனையான 34.8 லட்சம் டன்களுடன் ஒப்பிடுகையில் இது 1.1 சதவீதம் குறைவு.

டீசல் விற்பனை: நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கியக் குறியீடான டீசல் விற்பனை, கடந்த ஆண்டின் 64.3 லட்சம் டன்களில் இருந்து 10.7 சதவீதம் அதிகரித்து 71.2 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது.

பொதுவாகப் பருவமழைக் காலத்தில் பாசனப் பம்புகளின் தேவை குறைவதுடன், வாகனப் போக்குவரத்தும் மந்தமாவதால் எரிபொருள் பயன்பாடு குறையும்.

ஆனால், இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் விவசாயி கள் வயல்களுக்குப் பாசனம் செய்ய டீசல் பம்புகளைப் பெருமளவில் பயன்படுத்தியதே விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

அதே நேரத்தில், சமையல் எரிவாயு விற்பனை 17.4 சதவீதம் சரிந்து 23.70 லட்சம் டன்களாகக் குறைந் துள்ளது. மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட விநியோகச் சிக்கல் களுக்குப் பிறகு, நுகர்வோர் பலர் குழாய்வழி இயற்கை எரிவாயுவுக்கு (PNG) மாறியதே இந்தச் சரிவுக்குக் காரணம் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *