எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது!

1 Min Read

பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியதுஜனநாயக விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தஞ்சையில் நேற்று (3.8.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்சேபகரமாகப் பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இன்று (4.8.2026) மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, காவல்துறையினர் ‘‘அதிவிரைவாகக்’’ கைது செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவதூறுப் பேச்சு என்று கருதினால், அதற்கு உரிய சட்ட முறையில் வழக்குத் தொடுத்து,  விசாரணை நடத்தி, பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுதானே முறையானது!

அதுவும், நாளை (5.8.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை எப்படி யாவது அதில் பங்கேற்கச் செய்யவிடக் கூடாது என்ற அவசரமே இதற்குக் காரணமா என்ற சந்தேகம்தான் பரவலாக எழுகிறது.

ஒருபோதும்
ஏற்க முடியாது

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்ட னத்திற்குரியது; இந்தப் போக்கு ஒருபோதும் ஜனநாயக ஆட்சியின் அம்சமும் ஆகாது.

இத்தகைய போக்குகள் எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

4.8.2026

சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *