இடைப்பாடி, ஆக. 3- இடைப்பாடி பெரியார் படிப்பகம் சார்பில் 25.07.2026 காலை 10.30 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி தலைமையில். ஆசிரியர் கி வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் வெளியீடு.. நூல் ஆய்வுரை விழா நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ப.க. சி.மதியழகன் வரவேற்று உரையாற்றினார். பழனி புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்). சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்). வீரமணி ராசூ (மாவட்டத் தலைவர் சேலம்) சுரேஷ் (ஆத்தூர் மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தொடக்கவுரை நிகழ்த்தினார். மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி கருத்துரை வழங்கினார் .நூலினை வெளியிட்டு நீண்டதொரு ஆய்வுரையை மாணவர்கள் எப்படி பக்கம் பக்கமாக புத்தகத்தை படித்துக் காட்டுவார்களோ அப்படியொரு ஆழமான கருத்து மிக்க உரையை கழகப் பேச்சாளர் சு.பெ.தமிழமுதன் ஆற்றினார். .அரங்கத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தை கழகத் தோழர்கள், ,ஆசிரியர்கள், சமுதாயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் புத்தகத்தின் விலை ரூ.120.கொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.
ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்), பத்திர எழுத்தர் வெங்கடேசன், பத்திர எழுத்தர் செந்தில் குமார், ஆடிட்டர் இரவி, மெ.காமராஜ், பெரியார் படிப்பக காப்பாளர்,– அன்புபழனி – பெரியார் பற்றாளர்.கேசவன் – ராமலிங்கம் – கவிஞர். சுசி பாஸ்கர் நிறுவனர் வெற்றிசிறகு அறக்கட்டளை – ராமசந்திரன் செயலாளர் தொண்மை தமிழ் சங்கம் ஓமலூர். கவிஞர் சிவக்குமார் துணைத்தலைவர் தொண்மைத் தமிழ் சங்கம் ஓமலூர் – கவிஞர் இளையமூர்த்தி நிறுவனர் பூவிதழ் அறக்கட்டளை – அ.தங்கராசு செயலாளர் தமிழ்நாடு பருவதராசகுல பட்டதாரிகள் சங்கம் – சி. ராசாளி பருவத மலர் மாத இதழ் – சி.மெய்ஞானருள் நகர செயலாளர். உல.கென்னடி நகர தலைவர் தாரை இரா.கலையரசன்.நகர தலைவர் மேட்டூர். ரா.முத்துகுமார் பெரியார் பற்றாளர் பெ.சவுந்தர்ராசன். ஓமலூர். வழக்குரைஞர். கனகரத்தினம் .. முல்லைவேந்தன்.
மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன் நன்றி கூறினார்.
இவ்விழாவினையும். சிந்தாமணியூர் கி.வசந்தா உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியினையும் – கோவி.அன்புமதி (தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்). சி.மதியழகன் (செயலாளர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) – பு.வீரமணி (மாவட்ட அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்து இருந்தனர்.
