மீண்டும் கேரளாவில் நிலச்சரிவு பெண் உயிரிழப்பு

இடுக்கி, ஆகஸ்ட் 1 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் கொண்ட (NDRF) சிறப்புக் குழு வந்துள்ளது. துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்களும் இணைந்துள்ளனர் கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *