அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓய்வுபெற்ற சுகாதார மேற்பார்வையாளர் க.கலியமூர்த்தி அவர்களின் இணையரும் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், தலைமையாசிரியர் க.சாந்தி, துணை வட்டாட்சியர் க.விஜயா, மாவட்ட துணைச்செயலாளர் க.கார்த்திகேயன் ஆகியோரின் தாயாருமானதனலட்சுமி அம்மையாரின் நினைவு நாளை முன்னிட்டு (30.7.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.
– – – – –

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டஎரிப்பு வீரர் இரா.பொன்னுசாமி அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை (1.8.2026) முன்னிட்டு அவரது மகன் பொன்.பன்னீர்செல்வம், மருமகள் அலமேலு ஆகியோர் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டிக்காக ரூ.3000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி!
