தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் உயர்தர வணிக முதலீடு மய்யம் தொடக்கம்!

2 Min Read

சென்னை, ஜூலை 31– குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், சென்னை பெரம்பூரில் எஸ்.பி.ஆர். இந்தியா நிறுவனம் தனது 63 ஏக்கர் பரப்பளவிலான எஸ்.பி.ஆர். சிட்டியில் உருவாக்கப்பட்டுள்ள ‘டிஸ்ட்ரிக்ட் 12’ என்ற ஒருங்கிணைந்த வணிக முதலீட்டு மய்யத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில் முனைவோர், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்கள், சென்னை நகரின் வணிகப் பகுதியில் பிரீமியம் அலுவலகங்களைச் சொந்தமாக்கும் வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது. இத் திட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழில் முனைவோர் வளர்ச்சியடைய உதவும் வணிகக் கட்டமைப்புகளை உருவாக்குவதே எஸ்.பி.ஆர்.-இன் நோக்கம். தொழில் முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) மற்றும் தொழில்முறை வல்லுநர்களுக்கு நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த சூழலின் பிரீமியம் வணிக முகவரியை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று எஸ்.பி.ஆர். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ்கவாட் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் பசுமைத் தொழிற்சாலை தொடக்கம்!

சென்னை, ஜூலை 31– பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டடங்களைக் கட்ட, ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம், தனது ரெனாடஸ் பிராடக்ட் நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது.

நாயுடுப்பேட்டையில் ரூ.350 கோடி முதலீட்டில் ரெனாகான் நிறுவனத்தின் பசுமைத் தொழிற்சாலையில் இந்த போர்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும்.

ஆண்டுக்கு 60,000 மெட்ரிக் டன் ஃபைபர் சிமெண்ட் போர்டுகள் உற்பத்தி திறனைக் கொண்டுள்ள இந்தத் தொழிற்சாலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

இந்தப் புதிய தொழிற்சாலை, மேம்பட்ட உற்பத்தி, புதுமை மற்றும் நிலைத் தன்மையை ஒருங்கிணைத்து இந்தியாவின் கட்டுமானத் துறைக்காக உலகத் தரத்திலான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் நீண்டகாலப் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்று ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.செல்வசுந்தரம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *