நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஊட்டி, ஜூலை 31- நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவு திட்டம் பெயர்கள் மாற்றப்பட்ட வரிசையில். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற் பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கொண்ட குடும்பங்கள் ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை பெற்றுச் செல்வதில் ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் முதலமைச்சரின் தாயுமான வர் திட்டம் என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் ரேசன் பொருட்கள் வீடு வீடாக எடுத்து செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத் திற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் எந்தவித புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

மாறாக, முந்தைய திமுக அரசின் சில முக்கிய நலத்திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்றி வருகிறது. இதில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டப் பெயரிலிருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது. ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்பது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டம் ‘திறன் தமிழ்நாடு’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கை முந்தைய அரசின் அரசியல் அடையாளங்களை நீக்கும் நோக்கில் இருப்பதாக மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் உள்ளது. இந்த சூழலில் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக புதிதாக வேறு எந்த பெயரும் வைக்காத நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வயது முதிந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு 4,5ஆம் தேதிகளில் வழங்கப்படும். இத்திட்டத்தினை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த பெயர் நீக்க நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *