திருச்சி, ஜூன் 13– திருச்சி – பெரியார் மருந்தியல் கல்லூரியில் 11.06.2026 அன்று காலை 9.30 மணியளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப் பட்ட சிங்கப் பெண் சிறப்புப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்புப் படையின் காவல் துறை அதிகாரிகள் பூவிழிப் பிரபா, பானுமதி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் மகளிர் பணித் தோழர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினர்.
சமூக ஊடகங்கள், போதைப் பழக்கங்கள் போன்றவற்றிற்கு அடிமை யாகும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்படிப்பட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களை சரியான முறை யில் நல்வழிப்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் சிங்கப் பெண் சிறப்புப் படையினை அணுகுமாறு கேட்டுக் கொண்டனர். முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை சிங்கப் பெண் சிறப்புப் படையினர் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.
