கொலை செய்துவிட்டு ஏழு நதி நீரைக்கொண்டு கல்லைக் கழுவினால் பாவம் நீங்கிவிடுமாம்!

1 Min Read

காசியாபாத், ஜூலை 31 கடந்த ஆண்டு 13 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கு பிரபலமாக பேசப்பட்டது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லாமியராக இருந்து ஹிந்துவாக மதம் மாறிய சலீம் வாஸ்திக் ஆகும்

பிணையில் உள்ள இவருக்கு கொலைப்பாவம் நீங்க சாமியார்கள் சிறப்பு யாகம் நடத்தி காவட் யாத்திரையில் கலந்துகொண்டு வாஸ்திக் என்பவர் தலைமையில், ஆகஸ்ட் 7 அன்று அனைவரும் ஹரித்வாரில் இருந்து புறப்பட்டு, காசியாபாத்தில் உள்ள தாஸ்னா கோவிலை அடைந்ததும் ‘ஜலாபிஷே கம்’ செய்யவுள்ளனர் இதற்கான யாகம் 29.7.2026 அன்று நடந்தது

பு:சலீம் வாஸ்திக் 1995-இல் நடந்த ஒரு கடத்தல் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பிணையில் வெளியவந்துபிறகு சிறுவன் ஒருவனைக் கொலை செய்து மீண்டும் சிறை சென்றார்.  சமீபத்தில் பிணையில் வெளிவந்த இவர் ஹிந்துவாக குடும்பத்தோடு மதம்மாறினார் தற்போது இவருக்காக கொலைப்பாவம் நீங்க சாமியார்கள் யாகம் நடத்துகிறார்களாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *