கரூர், ஜூலை 31- கரூர் 04.03.2019 அன்று தினமலர் நாளிதழில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டிக்கும் விதமாக தினமலர் நாளிதழை எரித்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதி இன்றி தினமலர் நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ததற்காக கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் அன்பு, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ராமசாமி, மாவட்டக் காப்பாளர் ராஜு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், கரூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் காலம் சென்ற காமராஜ், செல்வராஜ், சதாசிவம், துரை கந்தசாமி பதிமூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
29.07.2026 அன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது
அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக மூத்த வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் கழக மாநில வழக்குரைஞர் அணி துணைத்தலைவர்ள் ஆஜரானார்.
வழக்குரைஞர் தமிழ் இராஜேந்திரன் உடன் இருந்தார். மேற்படி வழக்கு 28.09. 2026 அன்று ஒத்திவைக்கப்பட்டது.
