மேகதாது அணை திட்ட அறிக்கை மீண்டும் நிராகரிப்பு கருநாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது

2 Min Read

டில்லி, ஜூலை 30 காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதி யில் புதிய அணை கட்டுவதற்காக கருநாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய நீர் ஆணையம் மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) கேள்விக்கு அளிக்கப் பட்ட பதிலில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான
முக்கியக் காரணங்கள்

கடந்த ஏப்ரல் 21, 2026 அன்று, ஏற்ெகனவே தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் சில புதிய கூறுகளைச் சேர்த்து கருநாடக அரசு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அந்த அம்சங்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக இருப்பதாகக் கூறி, கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஒன்றிய நீர் ஆணையம் அதை கருநாடக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

நீர்மின் திட்ட இணைப்பு: 2018-ஆம் ஆண்டு முதன்முதலில் குடிநீர் தேவை எனக் கூறியதால் இத்திட்டத்திற்கு கொள்கை அளவில் மட்டுமே அனுமதி வழங் கப்பட்டது. ஆனால், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் ‘சிவன சமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டமும்’ மேகதாது அணை திட்டத்தோடு இணைக்கப்பட்டி ருந்தது கண்டறியப்பட்டது.

முறையற்ற புள்ளி விவரங்கள்: பெங்களூரு நகரின் தற்போதைய உண்மை நீர்த்தேவை என்ன என்பது குறித்த விவரங்கள் தவிர்க்கப்பட்டு, பழைய புள்ளிவிவரங்களே வழங்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது காவிரியில் இருந்து கருநாடகா எவ்வளவு நீரைப் பயன்படுத்துகிறது என்ற தெளிவான தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டி மேகதாதுவில் அணை கட்ட கருநாடகா முயல்வதற்கு தமிழ் நாடு அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தேவையான திருத்தங்களைச் செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்து அதை மீண்டும் சமர்ப்பிக்க கருநாடக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *