டெலிகிராம் சிஇஓ பன்னாட்டளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

1 Min Read

மாஸ்கோ, ஜூலை 30- தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச் சாட்டில் காரணமாக ‘டெலிகிராம்’ மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை நேற்று (29.7.2026) கூறியதாவது:

ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலை களை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்பு கள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.

அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம் நீக்கத் தவறியது. அதனால் தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீது ரஷ்யா கிரிமினல் விசாரணையை தொடங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பவெல் துரோவ் கூறியிருந்தார். தங்களது டெலி கிராம் செயலியை தடை செய்ய இந்த குற்றச்சாட்டு புனையப் பட்டதாகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகள் நசுக்கப்படுவதாக அவர் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில், அவரை பன்னாட்டளவில் தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

41 வயதான அவர், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். அவரது டெலிகிராம் தளம் அந்நாட்டில் மிகவும் பிரபலம். அதிகளவிலான மக்கள் அதனை அங்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்தத் தளம் அங்கு தடை செய்யப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *