தர்மேந்திரப் பிரதான் பதவி விலகலைக் கொண்டாடிய பா.ஜ.க. பிரமுகர்களின் மகள்களால் பரபரப்பு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய கல்வி அமைச்சரும், ஒடிசா மாநிலத்தின் பிரபல பாஜக தலைவருமான தர்மேந்திர பிரதான், இளைஞர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். இவரது பதவிவிலகலை நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாஜக தலைவர்களின் மகள்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருவது கட்சித் தலைமைக்கு பெரும் நெருடிக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி. மகளின் உறுதியான பதிவு

புவனேஸ்வர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி யுமான அபராஜிதா சாரங்கி, தர்மேந்திர பிரதானின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், இவரது மகளான அர்சிதா சாரங்கி ஆரம்ப முதலே இளைஞர்களின் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வந்தார்.

தற்போது தர்மேந்திர பிரதான்  பதவி விலகலை அடுத்து, அதைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டாடும் வகையில் அர்சிதா ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். செய்தி பரவியதும், அந்தப் பதிவை உடனடியாக நீக்குமாறு அர்சிதாவுக்கும், அவரது தாயார் அபராஜிதாவுக்கும் பாஜக மேலிடத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால், இந்த அழுத்தங் களுக்குப் பணியாத அர்சிதா சாரங்கி, மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில் தர்மேந்திர பிரதானின் நேர்முக உதவியாளரை நேரடியாகக் குறிப்பிட்டு, “என் தாயாருக்கு நீங்கள் செய்தி அனுப்புவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும், ஆனால் நான் இந்த பதவிவைக் கண்டிப்பாக நீக்க மாட்டேன்” என்று உறுதியாகப் பதிவிட்டுள்ளார்.

மகாராட்டிராவிலும்
வலுக்கும் எதிர்ப்பு

இதேபோல, மகாராட்டிராவி லும் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் மும்பையில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றார். “நான் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகளாக இருந்தாலும் இந்த அரசாங்கம் மாணவர்களின் இறப்பிற்குப் பதி லளித்தே ஆக வேண்டும்” என்று அவர் மேடையில் முழங்கினார்.

அவரது இந்தப் பேச்சு அடங்கிய காட்சிப் பதிவை யூடியூப் தளம் நீக்கிய நிலையில், “தனது காட்சிப் பதிவை ஏன் நீக்கப்பட்டது?” என யூடியூப்பிடம் விளக்கம் கேட்டுள்ள அவர், பிற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதைப் பதிவிட்டு வருகிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமே கல்வி அமைச்சரின் பதவி விலகலைக் கோரி வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகளின் மகள்களே அரசாங்கத்திற்கு எதிராகத் துணிச் சலாகக் குரல் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *