ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி வந்தது முதல் நான்காவது முறையாக கல்வி அமைச்சர் பந்தாடல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 27 பா.ஜ.க. தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் 4ஆவது முறையாக கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர் பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் வினாத் தாள் கசிவால் பாதிக்கப் பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண் டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய கூடாது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.

இதன் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 25.7.2026 அன்று பதவியிலிருந்து விலகினார். புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டில்லியில் சேவா தீர்த் அலுவலக வளாகத்தில் உள்ள கல்வி அமைச்சகத்தில் அவர் நேற்று (26.7.2026) புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 25.7.2026 அன்று  கருநாடகாவில் இருந்தேன். ஒன்றிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட உடன் அன்றிரவே டில்லியை வந்தடைந்தேன். 26.7.2026 காலையில் கல்வி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன். இது எனக்கு புதிய துறை. எனவே முதல் கட்டமாக அனைத்து அதிகாரிகள் உடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவேன்.

கல்வித் துறையில் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கேட்டறிவேன். பிரதமர் நரேந்திர மோடி என்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பை வழங்கி உள்ளார். எனவே மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி காரணமாக ஒன்றிய கல்விச் செயலாளர் வினீத் ஜோஷி கடந்த 24-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கல்விச் செயலாளராக டி.கே. அனில்குமார் நியமிக்கப்பட்டார். ஒன்றிய கல்வித் துறையின் செயல் பாடுகள் குறித்து புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம், புதிய செயலாளர் அனில் குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (26.7.2026)  மாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். நுழைவுத் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) இருந்து ஏற்கெனவே 47 அலுவலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அடுத்த ஒரு மாதத்துக்குள் என்டிஏ அமைப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *