கோயில் என்றாலே திருட்டு தானா? கோவையில் கோயிலில் காணிக்கை திருடிய அர்ச்சகர் உட்பட நால்வர் கைது!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கோவை, ஜூலை 27 கோவையில்  பெரியகடைவீதி கோனி​யம்​மன் கோயில் உண்​டியல் காணிக்​கைகள் 15 ஆம் தேதி எண்​ணப்பட்டன. அங்கிருந்த ஊழியர்​கள் சிலர், யாரும் கவனிக்​காத சமயத்​தில் ஒரு உண்டியலைத் தனி​யாக எடுத்து வைத்​தனர். பின்​னர், அன்​றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்​கைகளை ஒரு பையில் எடுத்​துச் சென்​றனர்.

இதை கவனித்த  பக்தர் ஒருவர் அளித்த  புகாரின்பேரில், மண்டல இணை ஆணை​யர் ரமேஷ் 24.7.2026 அன்று விசா​ரணை​யில் ஈடு​பட்​டார். இதில், காணிக்கை பணத்தை திருடியது கோட்​டைமேட்​டைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ண​ராஜ், ஊழியர்கள் பீளமேட்​டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், பேரூரைச் சேர்ந்த சரவணன், ரத்​தினபுரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் ஆகியோர் என்​பது தெரிய​வந்​தது. புகாரின்​பேரில், உக்கடம் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்​தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *