மாணவர்களுக்கு கல்விக் கடன் வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் அலைக்கழிப்பு

சென்னை, ஜூலை.23- பெற் றோரின் கடன் பெறும் தகுதி மோசமாக இருப்பதாக கூறி வங்கிகள் கல்விக்கடனை மறுத்து வருகின்றன. இதன் காரணமாக, பல மாணவர்கள் கல்விக்கடன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறும்போது, கல்விக் கடனை பொறுத்தமட்டில்சம்பந்தப்பட்ட மாணவர்தான் முதன்மை கடன் பெறுபவராக கருதப்படுவார்களே தவிர, அவர்களது பெற்றோர் அல்ல என்பதை இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

கல்விக்கடன், எதிர்கால வருவாயை அடிப்படையாகக் கொண்ட கடன் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவர் கடன் பெற தகுதி கொண்டவராகவே கருதப்படுவார் என இந்திய வங்கிகள் சங்கம் தனது வழிகாட்டுதலில் கூறி உள்ளது.

நோக்கம் சிதைக்கப்படுகிறது

இதையெல்லாம் வங்கி நிர்வாகங்கள் கடைப்பிடிப்பது இல்லை. இந்த வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளாமல் பெற்றோரின் கடன் பெறும் மதிப்பு (கிரெடிட் ஸ்கோர்) மோசமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கல்விக்கடன் மறுப்பதில் தவறு இல்லை என கடந்த 20-ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு கூறியிருக்கிறது.

இதுபோன்ற தீர்ப்புகளை சுட்டிக் காட்டியும் வங்கிகள், கல்விக்கடன் விவகாரத்தில் கறாராக நடந்து கொள்கின்றன. இதன்மூலம், பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நலனுக்காககொண்டு வரப்பட்ட கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் தரப்பில் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *