‘நீட்’ விவகாரத்தில் திறந்த மனதுடன், ஒன்றிய அரசு ஆலோசனைகளை நடத்த வேண்டும்! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 23- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவுக் குரல் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டிய நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு இருப்ப தாவது;

மூன்று முக்கிய வாக்குறுதி களுடன் நீட் தேர்வு அறி முகப்படுத்தப்பட்டது.

  1. சுமையைக் குறைத்தல்,

2.வணிகமயமாக்கலை ஒழித்தல்,

  1. தரத்தை மேம்படுத்துதல்.

இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது.

நீட் தேர்வு கற்றலின் மய்யத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மய்யங்களுக்கு மாற்றி உள்ளது. அவ்வளவு தான்.

நீட் தேர்வின் பிரச்சனை எப் போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதி யானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.

டில்லியில் நடைபெறும் போராட் டங்களுக்கு பிறகாவது ஒன்றிய அரசு விழிப்படைய வேண்டும். நீட் விவகாரத்தில் திறந்த மனதுடன், ஒன்றிய அரசு ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

* இந்தியாவில் அதிகாரக் குவிப்பு தேவையில்லை, மாறாக மாநிலங்கள் மீதும், அதன் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது.’’

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *