நவீன தொழிற் நுட்ப உதவியுடன்
2 பெண்களுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்தனர்
சென்னை, மே.8 சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உயி ருக்கு ஆபத்தான நிலையில் வந்த 2 பெண்களுக்கு ரத்த நாளத்தில் இருந்த வீக்கங்களை வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ரத்த நாளத்தில் வீக்கம்
ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக் கப்பட்ட இருவேறு பெண்களுக்கு உயர் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவர் (டீன் மருத்துவர்) சாந்தா ராமன், கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கர் ஆகியோர் கூறியதாவது.
கழுத்துப் பகுதியில் வீக்கம் மற்றும் வலியுடன் 40 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருக்கு இப்பிரச்சினை இருந்தது. பரிசோதனையில் பெண்ணுக்கு ரத்த நாளத்தில் (தமனி) வீக்கம் மற்றும் வெடிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு ‘சப்க்ளேவியன் அன்யூரிஸம்’ என்று பெயர். பாதிப்படைந்த அந்த ரத்த நாளம்தான் மூளை, கழுத்து, கைகளுக்கு ஆக்சிஜனுடன் கூடிய ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடியது பொதுவாக ரத்த நாளங்கள் வலுவிழக்கும் போது அதன் ஒருபகுதி பலூன் போன்று வீக்கமடைந்து பெரிதாவதுதான் ‘அன்யூரிஸம்’ பாதிப்பு.
ரூ.10 லட்சம் வரை…
அதற்கு உரிய சிகிச்சை அளிக்கா விட்டால் வீக்கம் வெடித்து உயிருக்கே ஆபத்தாகிவிடும். அந்த வகையில் அப்பெண்ணுக்கு உடனடியாக ரத்த நாளத்தின் வழியே ஊடுருவி இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட்உபகரணம் பொருத்தி வீக்கத்தை கட்டுப்படுத்தினோம். ‘எண்டோ வாஸ்குலர் ஸ்டென்டிங்’ எனப்படும் இந்த சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அவருக்கு அதே இடத்தில் வீக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து நெஞ்சுப் பகுதியில் திறந்த நிலை அறுவை சிகிச்சை மேற் கொண்டு வீக்கமடைந்த ரத்த நாளத்தை மருத்துவர்கள் சீரமைத்தனர். அதன் பயனாக அவர் குணமடைந்தார் தனி யார் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை சென்னை அரசு பொது மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று கழுத்துப் பகுதியில் சப்க்ளேவியன் தமனி வீக்கத்துக்குள்ளான 58 வயதான மற்றொரு பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் செயற்கை நாளத்தைப் பொருத்தி ரத்த ஓட்டம் மாற் றியமைக்கப்பட்டது. இதற்கு ரூ4 லட்சம் வரை செலவாகக் கூடும். ஆனால், முதலமைச்சர் காப்பீட்டில் கூட்டணமின்றிஅப்பெண்ணுக்கு இங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மிக நுட்பமான இரு வேறு ரத்தநாள அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
