தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

1 Min Read

திருச்சி, ஜூலை22- தமிழ்நாட்டிற்கு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தர வேண்டிய 53 டி.எம்.சி. தண்ணீரை இன்று வரை திறந்து விடவில்லை. இதனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே காவிரி மேலாண்மை வாரியம் காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதன்பின் அவர்கள் ஆற்றின் மய்யப்பகுதிக்கு சென்று ஆற்று மணலில் புதைந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை காவல் துறைய ஆய்வாளர் சுகுணா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *