‘நீட்’ முறைகேட்டை கண்டித்து டில்லியில் நடை பெறும் போராட்டத்துக்கு திரைத்துறையில் இருந்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் சென்று இளைஞர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், அதிதி ராவ், டொவினோ தாமஸ், சோனு சூட் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இளைஞர்களின் போராட்டத்துக்கு துணை நிற்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
டில்லி நோக்கி படையெடுத்த விவசாயிகள்
தடுத்து நிறுத்தம்
தடுத்து நிறுத்தம்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து டில்லிக்கு பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை டில்லிக்குள் நுழைய விடாமல், காவல் துறை எல்லையை மூடினர். இந்த ஒப்பந்தம், குறைந்த விலையில் அமெரிக்க விவசாய பொருள்களை இந்திய சந்தைக்குள் கொண்டு வரும் என்றும், இதன் விளைவாக தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
சைகை மொழியில் முழக்கமிட்ட மாற்றுத்திறனாளிகள் காணொலி!
டில்லியில் ‘நாடாளு மன்றம் நோக்கிப் போவோம்’ போராட்டத்தை சிஜேபி கட்சினர் முன்னெடுத்தனர். இதற்காக ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்களுடன் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்றது கவனம் ஈர்த்தது. அவர்கள் சைகை மொழியிலேயே முழக்கங்கள் எழுப்பியதும், சகபோராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுகின்றன. நீட் தேர்வு முறைகேட்டுக்கு நீதி கோரி இந்த போராட்டம் தொடர்கிறது.
