அமெரிக்க கடற்படையில் 300 பேரை வழிநடத்தும் இந்திய வம்சாவளி மாணவி குவிந்து வரும் பாராட்டு

1 Min Read

வாசிங்டன் ஜூலை 21- அமெரிக்க கடற்படையில், 300 வீரர்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்று முத்திரை பதித்துள்ளார், 17 வயதேயான இந்திய வம்சாவளி இளம் பெண் ரித்தி சவுகான்.

நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறு வயது முதலே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதீத ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவான ‘சீ கேடட்’ அமைப்பில் இணைந்தார். இவரது கடின உழைப்பு, தலைமைப் பண்பு மற்றும் அசாத்திய திறமைகளைக் கண்டு வியந்த கடற்படை நிர்வாகம், தற்போது இவருக்கு மிக உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது.

பொதுவாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் 300 கடற்படை வீரர்களை வழிநடத்தும் ‘ரெஜிமென்டல் கமாண்டர்’ பொறுப்பு, ரித்தி சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கண்காணிப்பது மற்றும் அணிவகுப்புகளை தலைமை தாங்கி நடத்துவது போன்ற முக்கியப் பணிகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் கடற்படையில், ஒரு இளம் இந்திய வம்சாவளி பெண் இத்தகைய உயரிய பதவியை அடைந்திருப்பது பன்னாட்டு அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ரித்தி சவுகான், “இந்த பொறுப்பு எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடின உழைப்பும், இலக்கை நோக்கிய பயணமும் இருந்தால் எந்தவொரு உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு எனது இந்த பயணமே சாட்சி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரித்தி சவுகானுக்கு, இந்தியர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *