மாதிரிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல தற்காலிகத் தடை!

1 Min Read

சென்னை, ஜூலை 21- அரசு மாதிரிப் பள்ளி களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல பள்ளிக் கல்வித் துறை தற்காலிகமாக தடை விதித் துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் அரசு மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதலில் இப்பள்ளி களில் பணியாற்றி வரும் முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் கடந்த ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதுநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வேறு மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்து இடமாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.

தற்போது நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கெனவே ஆசிரி யர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட் டுள்ளதாலும், மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நலன் கருதியும் அந்த ஆசிரியர்கள் தொடர்ச்சி யாக மாதிரிப் பள்ளியி லேயே மாற்றுப் பணியில் ஈடுபட ஆணை வழங்கு மாறு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலர் கேட்டுக் கொண் டுள்ளார்.

அதை ஏற்று, பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி மாறுதல் பெற்று சம்பந்தப் பட்ட பள்ளியில் பணி ஏற்றுக்கொண்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் மாதிரிப் பள்ளி களிலேயே மாற்றுப் பணி வழங்கப்படுகிறது.

மறு உத்தரவு வரும் வரை மாதிரிப் பள்ளி களில் அவர்கள் மாற்றுப் பணியில் ஈடுபடும் வகையில் பணி விடுவிப்பு ஆணை வழங்க வேண்டும்.

அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பணிபுரியவில்லை என்பதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல, மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்குச் செல்வதால் அரசுப் பள்ளிகளில் கற்பித் தல் பணியை தொடர, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *