விழிகள், உடல் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட சோ.இராமன் படத்திறப்பு நினைவேந்தல்

1 Min Read

விருத்தாசலம், ஜுலை 18- பகுத்தறி வாளர்கழக மாநில அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம் தந்தை புதுக்கூரைப்பேட்டை சோ.இராமன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் ஜுலை 14 அன்று காலை 11 மணி அளவில் விருத்தாசலம் கழக மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வின் தொடக்கத்தில் மாநில ப.க அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம் வரவேற்று பேசினார்.

இதில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்  சோ.இராமன் படத்தை திறந்து வைத்து குருதிக்கொடை, விழிக் கொடை உடற்கொடை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை  நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயன் பெரும் வண்ணம் உரை யாற்றினார்

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், மாவட்டச் செயலாளர்கள் ப.வெற்றிச்செல்வன், கா.எழிலேந்தி, கோ.வி.பெரியார்தாசன், கழகப் பொறுப்பாளர்கள் சி. மணிவேல், நா.தாமோதரன், கோ.வேலு, தர்மலிங்கம் , ராமநாதன், புலவர் இளவரசன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கழகத் தோழர்களும், குடும்பத்தினர், உறவினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

மறைந்த சோ.இராமனின் கண்கள் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் சிதம்பரம் அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக இரா.இராசாராமன் நன்றி கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *