விருத்தாசலம், ஜுலை 18- பகுத்தறி வாளர்கழக மாநில அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம் தந்தை புதுக்கூரைப்பேட்டை சோ.இராமன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் ஜுலை 14 அன்று காலை 11 மணி அளவில் விருத்தாசலம் கழக மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் மாநில ப.க அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம் வரவேற்று பேசினார்.
இதில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சோ.இராமன் படத்தை திறந்து வைத்து குருதிக்கொடை, விழிக் கொடை உடற்கொடை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயன் பெரும் வண்ணம் உரை யாற்றினார்
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், மாவட்டச் செயலாளர்கள் ப.வெற்றிச்செல்வன், கா.எழிலேந்தி, கோ.வி.பெரியார்தாசன், கழகப் பொறுப்பாளர்கள் சி. மணிவேல், நா.தாமோதரன், கோ.வேலு, தர்மலிங்கம் , ராமநாதன், புலவர் இளவரசன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கழகத் தோழர்களும், குடும்பத்தினர், உறவினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
மறைந்த சோ.இராமனின் கண்கள் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் சிதம்பரம் அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக இரா.இராசாராமன் நன்றி கூறினார்
