பத்ரிநாத் கோயில் பொருளாளர் நீக்கம்

டேராடூன், ஜூலை 17 உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தக் கோயில் பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளார்

இதுகுறித்து பத்ரிநாத்-கேதர்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அதிகாரி சோஹன் சிங் கூறியதாவது:

பத்ரிநாத் கோயில் பெட்டகத்தில் இருந்த வெள்ளியின் அளவு, பதிவேட்டில் எழுதப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதுகுறித்த விவரங்கள் பதிவேட்டில் திருத்தி எழுதப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கோயில் பொருளாளா் பொறுப்பில் இருந்து சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளதால் அந்தப் பொறுப்புக்கு கோயிலின் பூஜை கவுண்ட்டரில் பணியாற்றிய கேதார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பூஜை கவுண்ட்டா் பணிக்கு சந்தேஷ் மேத்தா மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார், மாமியார்!

மத்தியப் பிரதேசத்தில் புற்றுநோயால் தங்கள் மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கைம்பெண்ணான தங்களது மருமகளுக்கு மாமனாரும் மாமியாரும் ஆதரவாக நின்ற நெகிழ்ச்சியான சம்பவம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. மகன் மறைந்த பிறகு, மருமகளைத் தவிக்க விடாமல், அவளைத் தங்களின் சொந்த மகளைப் போலவே நடத்தினர். மேலும், அவளது வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும் என்பதற்காக, அவளுக்குப் பொருத்தமானவரை தேடி மறுமணமும் செய்து வைத்துள்ளனர்.

அதிர்ச்சித் தகவல்

வங்கக் கடலில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு.

பதவிகள் பறிக்கப்படும்

ஊழல் செய்யும் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்.

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒன்றிய அரசு புது வியூகம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மழைக் கால கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 3-இல் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமான இந்த மசோதா, போதிய ஆதரவு இல்லை என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *