அரியலூர், ஜூலை 16 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று (15.7.2026) அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சினை
“காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் நிலைப்பாடும் உணர்வும் தான், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி கருநாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஒன்றிய அரசும் இதில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படாது என்று நம்புகிறேன்.”
தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால், அதனை விசிக வரவேற்கும்.
ஜனநாயகத்திற்கு எதிரானது
“ஆகஸ்ட் 15-க்குள் அதிமுகவைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களை தவெக தன் பக்கம் இழுக்க முயற்சிப்ப தாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளி யான ‘ஆபரேஷன் எல்’ கட்டுரை குறித்துக் கேட்கிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற கட்சித் தாவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதனை விசிக தொடர்ந்து கண்டித்து வருகிறது.”
“நாகர்கோயில் சிறையில் சபரிவர்மன் உயிரிழந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது. சிறைச்சாலைகளில் இதுபோன்ற அத்துமீறல்களும் படுகொலைகளும் அரங்கேறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்த
பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி
பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி
“தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பு தவெகவுக்கு உள்ளது. ஆனால், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளைப் பலவீனப்படுத்தவும், அதிமுகவை முற்றாக ஒழிக்கவும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன.
அதிமுகவை குறிவைத்துதான் அண்ணாமலை காய் நகர்த்தி வருகிறார்; அல்லது அவரைப் பின்னி ருந்து இயக்குகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள சமூகத்தின் வாக்கு வங்கியைத் தன்பக்கம் ஈர்த்துவிட்டால், அதிமுகவைச் செயலிழக்கச் செய்ய முடியும் என சங்பரி வார்கள் கணக்குப் போடுகிறார்கள். அதனால்தான் அண்ணாமலை மேற்கு மாவட்டங்களைக் குறிவைத்து மாநாடுகளை நடத்துகிறார்.”
முதலில் அதிமுகவை பலவீனப் படுத்துவது, பின்னர் திமுகவைத் தனி மைப்படுத்திப் பலவீனப்படுத்துவது என்ற சங்பரிவார்களின் சூழ்ச்சி அரசியல் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.
