கங்கை – காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டுமே நாட்டின் தண்ணீர் பிரச்சினை தீரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து

விஜயவாடா, ஜூலை 16- ஆந்திர மாநிலம், இப்ரஹிம்பட்டினம் அருகே கிருஷ்ணா – கோதாவரி சங்கமிக்கும் இடத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.

பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: “வரும் 2027, மார்ச் மாதத்திற்குள் போலவரம் அணையை திறந்து நாட்டுக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் நீர்வளத்துறையில் சிற்றணைகள், தடுப்பணைகளுக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளோம்

அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்து, மேலும் 35 நீர்நிலை திட்டங்களை நிறைவு செய்வோம். பென்னா – வம்சதாரா நதிகள் இணைக்கப்பட்டால் ஆந்திர மாநிலத்தில் வறட்சி என்பதே ஏற்படாது. இதேபோன்று கங்கை, காவிரி நதிகளை இணைத்தால் நம் நாட்டுக்கே தண்ணீர் பிரச்சினை இருக்காது. நாட்டில் விவசாயமும் செழித்தோங்கும்.

குண்டூர் குடிநீர் கால்வாய் திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும். போலவரம் இடது கால்வாய் திட்டப்பணிகள் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, அனகாபல்லியில் கோதாவரி நீருக்கு மரியாதை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *