இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்! மாசு இல்லாப் பயணத்தின் புதிய தொடக்கம்!

புதுடில்லி, ஜூலை 16- இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகமாக உள்ளது.

“கிரீன் ஹைட்ரஜன் மிஷன்” திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

மாசு இல்லா இயக்கம்

டீசல் இல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில் நுட்பத்தில் இயங்கும். இதனால் புகை, கார்பன் வெளியேற்றம் முற்றிலும் இருக்காது. நீர் மட்டுமே வெளியேறும்.

அரியானாவில் உள்ள ஜிந்த் ரயில் தொழிற்சாலையில் இந்த ரயில் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.

அதிக சக்தி

இது 1200 HP திறன் கொண்ட உலகின் அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில்களில் ஒன்றாக இருக்கும். மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

முதல் வழித்தடம்

ஆரம்பத்தில் அரியானா மாநிலம் ஜிந்த் முதல் சோனிபத் வரையிலான 89 கிமீ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

எதிர்காலத் திட்டம்

வெற்றிகரமாக செயல் பட்டால், மலைப்பாதைகள் மற்றும் டீசல் ரயில்கள் இயங்கும் 35 வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயில் மூலம் இந்திய ரயில்வே 2030-க்குள் ஜீரோ மாசு (“Net Zero Carbon Emission”) இலக்கை அடைய முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *