சுயமரியாதை உணர்வு மிக்க இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா மறைவுக்குக் கழகத் தலைவர் இரங்கல்!

1 Min Read

தென்னகத்தின் இசைக் குயிலாகத் திகழ்ந்து, தனது ஈடு இணையற்ற இசையினால் பல கோடி மக்களை ஈர்த்த, திரையிசைப்  பாடகி
எஸ். ஜானகி அம்மா (வயது 88) அவர்கள் மைசூரில் காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்தும் பல  லட்சம் மக்களில் நாமும் உண்டு என்பது சிலருக்கு அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம்.

அவரது மெல்லிய குரல் அனைவரையும் ஈர்க்கத் தவறவில்லை என்பதற்காக மட்டுமல்ல; அவரின் பிரபல பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்களில் நாமும் ஒருவர் என்பதையும் தாண்டி, அவரிடம் காணப்பட்ட சுயமரியாதை, சமூக உணர்வு உறுதி கண்டு திரை உலகில்கூட இப்படியும் சில ‘அதிசய ராகங்கள்’ உள்ளனர் என்று மகிழ்ந்த நிலை உண்டு.

  1. தனக்கு டில்லி, பத்ம பூஷண் பட்டம் வழங்கியபோது காலந் தாழ்ந்து வழங்கியதை அவரது சுயமரியாதை ஏற்காது திருப்பி அனுப்பியது தனித்த துணிச்சல் ஆகும். கலை உலகில் இது எளிதில் நடக்காதது – நடத்திக்காட்டிய துணிச்சல்கார அம்மா அவர்!
  2. குறிப்பிட்ட வயதையும், இசைத் துறையில் குறிப்பிட்டகால கட்டத்தினையும் அடைந்த  பிறகு, இளையோருக்கு, புதியவருக்கு இடம் தர, தான் ஒதுங்கி வழிவிட்ட பரந்த, விரிந்த மனப்பான்மை அமைந்த ஓர் எடுத்துக்காட்டானவர்.

அவர் உருவத்தால் மறைந்தார்; ஆனால் இசை என்பதற்குப் ‘புகழ்’ என்று பொருள். அதற்கு அவர் தகுதியானவராவார்.

அவரை இழந்து வாடும்  கலை உலகத்திற்கும்,  உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

  திராவிடர் கழகம்  

சென்னை

12.07.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *