நன்கொடை

1 Min Read

* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் சேது.ஜெகதீசன்-காசியம்மாள் இணையரின் மகன் ஜெ.இன்பன் அவர்களின் 20ஆவது பிறந்த நாளை (13/07/2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கினர்.

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 67ஆவது தவணையாக ரூ.1000 வழங்கியுள்ளார்.

*தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், அதிமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர்   மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள் –  காளியம்மாள், கட்டையன் காடு காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் சி.பெமையன்- முத்துலட்சுமி ஆகியோரின் பேரன் மாவடுகுறிச்சி ஆர். பி. நடராஜன் – மகேஸ்வரி இணையரின் மகன், ந.பிரியதர்ஷினியின் சகோதரர் ந.கைலாஷ் குமார் 12.07.2026 அன்று 19ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500  நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *