ஆதிதிராவிடர் – பழங்குடியினர்மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் குழு

சென்னை, ஜூலை 11- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் புதிய உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்கவும், தடுப்புச் சட்டம் திறம்பட அமல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவை அரசு மறு சீரமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுவார். அமைச்சர்கள் மரிய வில்சன், வன்னியரசு, ராஜ்மோகன், பி.விஸ்வநாதன் உட்பட 7 அமைச்சர்கள், திருமாவளவன், சசிகாந்த் செந்தில், தனபால் உட்பட 8 பாராளுமன்ற உறுப் பினர் மற்றும் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர், குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த உயர்நிலை கண்காணிப்பு குழு முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *