கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.7.2026

3 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சர்ச்சை பேச்சு; அமைச்சர் ஆதவ் மீது சிபிஅய் வழக்கு? திமுக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று அவசர விசாரணை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அடுத்த கோயில் சர்ச்சை? தாஜ் மகால் வளாகத்தில் ஹிந்து கோயில் உள்ளதா என்ற மனுவுக்கு பதில் அளிக்க, ஒன்றிய அரசுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

* அயோத்தி ராமன் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு விவகாரத்தில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோரின் பதவி விலகலை அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘திராவிட மாடலை அழிக்கும் முயற்சி’: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டிலிருந்து மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் தவெக அரசுக்கு திமுக கண்டனம். சென்னையின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) வழித்தடத்தில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் இத்திட்டம், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது பிப்ரவரி 2024இல் தொடங்கி வைக்கப்பட்டது.

தி இந்து:

* மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட ஒத்திகையில் பயன்படுத்தப்படும் படிவத்தில் ஜாதியை குறிப்பிட ‘வெற்றுப் பகுதி’ (OPEN COLUMN) இடம்பெற்றுள்ளது.

* மத்தியப் பிரதேச அரசு வக்ப் வாரியத்தை மாற்றி அமைத்து 2 இந்து உறுப்பினர்களை நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு.

* கல்வித் துறை ‘தீவிர சிகிச்சைப் பிரிவில்’ (ICU) உள்ளது; காங்கிரஸ் குற்றச்சாட்டு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் கல்வி அமைப்பை ‘தீவிர சிகிச்சைப் பிரிவின்’ (ICU) நிலைக்குத் தள்ளி விட்டதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் விரைவில் ஒரு ‘கல்விச் சாசனத்தை’ (EDUCATION CHARTER) வெளியிடவுள்ளதாக தெரிவித்தது.

தி டெலிகிராப்:

* பாகுபாடு குறித்த வரையறையில் ‘பொருளாதாரப் பின்னணி’யையும் இணைத்து, பாகுபாடு தொடர்பான கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது என்.சி.இ.ஆர்.டி. (NCERT)-யின் 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகம். பரவலான கொள்கை விவாதங்களுக்கு மத்தியில், ஜாதி, மதம், பாலினம், பாலியல் ஈர்ப்பு, மாற்றுத்திறன், தோற்றம், இனம் அல்லது பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு ஏற்படலாம் என்று புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் கூறுகிறது.

* இஸ்ரேல் விவகாரத்தில் பிரதமரை ‘சுய-பிரகடனப்படுத்தப்பட்ட விஸ்வகுரு’ (உலகத் தலைவர்) என்று விமர்சித்த காங்கிரஸ்; இந்தியாவின் விழுமியங்களுக்கு துரோகம் இழைப்பதாகக் குற்றச்சாட்டு. இஸ்ரேலுக்கு இந்தியா போன்ற ஒரு நாடு உட்பட பல நாடுகளின் ஆதரவு இருப்பதாக நெதன்யாகு முன்னதாக ‘பாக்ஸ் நியூஸ் சண்டே பிரீபிங்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘டில்லி மற்றும் லக்னோ குழுக்களுக்கு இடையே அதிகாரப் போட்டி’: ராமன் கோயில் நன்கொடை ‘திருட்டு’ வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணைக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கேள்வி. “இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு என்றால் என்ன? … அமலாக்கத்துறை, சிபிஅய் அல்லது வருமான வரித்துறை (விசாரணையில்) ஈடுபட்டிருந்தால், விசாரணையின் கட்டுப்பாட்டை யார் வைத்திருப்பார்கள்? சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்? …இங்கே ஒரு அதிகாரப் போட்டி நடக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *