2027-இல் நடைபெறவுள்ள உ.பி., சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் செல்வாக்கு குறைந்து வருவதால், அக்கட்சியின் வாக்கு வங்கியை சமாஜ்வாதிக் கூட்டணிக்குத் திருப்ப அகிலேஷ் காய் நகர்த்துகிறாராம். உ.பி.,யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 14 பொது தொகுதி கள் உள்பட 100 இடங்களில் பட்டியல் இன வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
