பேரெழுச்சி தந்த அறப்போராட்டக் கள வீரர்கள் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி!

7 Min Read

‘சேலம் செயலாற்றும் காலம்’ என்றார் அறிஞர் அண்ணா, ஆம், கழகம் செயலாற்றியது உண்மை தானே? அதையும் நாம் கண்டோம்தானே? அவா ளும் கண்டுகொண்டதால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கின்றனர் தானே? ‘‘இந்த திராவிடர் கழகம் மட்டும் இல்லையென்றால்…’’ இந்த ‘விடுதலை’ மட்டும் இல்லையென்றால்… என்று நாள்தோறும்  ஒப்பாரி வைத்துக்கொண்டுதானே இருக்கின்றனர். அந்த அளவுக்கு, 1944 ஆம் ஆண்டு இதே சேலத்தில் நடைபெற்ற மாநாடு தந்த, இனமீட்புச் சொல்லான, ‘திராவிடர் கழகம்’ என்ற அடையாளம் மட்டுமே எண்ணற்றசாதனைகளை செய்து காட்டியிருக்கிறது! அதுதானே, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டை எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளது. அதனால்தானே அந்த ‘திராவிடம்’ என்ற கொள்கையைச் சிதைப்பதற்காக கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரியம்; பார்ப்பனியம் அதற்கே உரிய சாம, தான, பேத, தண்டம் என்று எல்லா உத்திகளையும் பயன்படுத்திப் பார்த்தும் பலன் கிடைக்காமல், ‘பலித்தவரை பார்ப்பனியம்’ என்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கின்றது. இதற்காகத்தானே பெரியாரும், அம்பேத்கரும், ‘பார்ப்பனர்களுக்கு முன் புத்தியும் இல்லை. பின் புத்தியும் இல்லை’ என்று பச்சையாகச் சொன்னார்கள். சூடு சுரணை இருந்தால்தானே? ‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்தானே திராவிடர் கழகம்’ என்று தன் வயிற்றெரிச்சலை ஆரியம் புதுப்பித்துக்கொள்கிறது.

அந்த ஆயிரம் பேரைக் கண்டுதானே ஆரியம் இன்னும் அலறிக் கொண்டிருக்கிறது? திராவிடர் கழகத்த வர், பெரியார் தொண்டர்கள் என்போர் இவர்களின் எண்ணிக்கைக் கணக்குக்குள் அடங்குவோர்தானே! ‘‘அட, பரிதாபத்திற்குரிய பார்ப்பனியமே!’ என்று எள்ளி நகையாடும் வகையில் அமைந்தது சேலம் பொதுக்குழு!

சேலம் அய்ந்து சாலை சந்திப்பு அருகில் உள்ள கே.எம்.பி.திருமண அரங்கில், 4.7.2026 அன்று காலையில் 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையிலும் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற அந்தப்பொதுக்குழுவில்தான் கருஞ்சட்டை வீரர்களுக்கு பேரெழுச்சி தந்த, அந்த நிகழ்ச்சியும் நடந்தேறியது. அந்தப் பேரெழுச்சிக்குக் காரணமானவர்  வேறு யார்? திராவிடர் கழகத்தின் தன்னேரில்லாத தலைவர், தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் அது!

பொதுவாகவே திராவிடர் கழகம் பொது ஒழுக்கச் சிதைவு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படுகிற இயக்கமாகும். மகளிர் பாதுகாப்பு விசயத்தில்கூட போதை ஒழிப்பு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்தான் என்றாலும், போதை ஒழிப்பு என்ப தில் கஞ்சா, அபின், ஹெராயின், குட்கா உள்ளிட்டவை மட்டும்தான் வகைப்படுத்தப்படுகிறது. இவற்றைவிட ஆபத்தானவை ஜாதி போதை, மத போதை, பதவி போதை, சினிமா போதை ஆகியவைதான் என்பதே திராவிடர் கழகத்தின் பார்வை.

முன்னது, தனி மனிதனை அல்லது அந்த தனி மனிதன் சார்ந்த குடும்பத்தை மட்டும்தான் பாதிப்படையச் செய்யக்கூடி யதாகும். ஆனால், பின்னது, ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிப்படையச் செய்யக்கூடியது.  ஆகவேதான், கடமை யுணர்வுடன் இதற்கென்று தனிப் பிரச்சாரப் படை அமைத்து அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து, சமூகத்தின் எல்லா தளங்களிலும் தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது  திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் விழைவு.

அந்த அடிப்படையில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கடந்த 11.06.2026, வியாழக்கிழமை அன்று ‘1000 இளைஞர்களை அறப்போ ருக்குத் தாருங்கள்! எதற்கென்று பிறகு சொல்கிறேன்!’ என்று ‘விடுதலை’யில்  அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் காரணங்கள் எதுவும் சொல்லப்பட வில்லை. திராவிடர் கழகத்தில் சேரும் போதே, ‘‘திராவிடர் கழகம் உங்களுக்கு பதவி தராது! பட்டம் தராது! சிறை தரும்! வேண்டுமானால் மானம் தரும்! மரியாதை தரும்! அறிவு தரும்!’’ என்று சொன்னதைக் கேட்ட பிறகும்தான், தொண்டர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

திராவிடர் கழகம் ஒரு வேறுபட்ட புதுமையான அற்புதமான இயக்கம் என்று சொல்லப்படுவது இதை முன்னிட்டுதான். சொந்தக் காசை செலவழித்துக்கொண்டு இயக்கப் பணி செய்ய வேண்டும். இந்த சூழலில்தான் கழகத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு பொதுக்குழுவில் பேரெழுச்சியை உண்டாக்கியது. அந்த அறிவிப்பு செய்யப்பட்ட காலத்தில்தான் நீட் எதிர்ப்புக்கு கண்டனப் போராட்டம், மேகதாது அணை கட்டுவதற்கு கண்ட னப் போராட்டம், கலைஞரின் 103 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம், மகாராட்டிரம் ஆகிய நான்கு மாநிலங்களில் 103 ‘‘திராவி டர் எழுச்சி நாள்’’ பரப்பு ரைக்கூட்டங்கள் என்று திராவிடர் கழகத்தின் ஒட்டுமொத்த அணிகளும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த காலம். அதிலும் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகம் நன்கொடை என்று இயங்கிக்கொண்டே இருந்த காலம் அது! இப்படிப்பட்ட நெருக்கடியில்தான் 16 வயது முதல் 35 வயது வரையிலான 1000 இளைஞர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அந்தக் காட்சி, கண்கொள்ளாக் காட்சி தான்!  பொதுக்குழு மேடையிலிருந்து ‘‘கழகப் பொறுப்பாளர்கள், அறப் போராட்டக் கள வீரர்கள் பட்டியலைக் கழகத் தலைவரிடம் தாருங்கள்’’ என்று அறிவிப்புச் செய்யப்பட்டவுடன், மேடையிலும், அரங்கிலும் ஒரு பர பரப்புத் தொற்றிக்கொண்டது. முதலில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா. ஜெயக்குமார், தனது கையில் இருக்கும் பட்டியலை வாசித்தார்.

நாகப்பட்டினம், காரைக்கால், திரு வாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விருத்தாச்சலம், அரியலூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருச்சி, லால்குடி, துறையூர், கரூர், தாராபுரம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம், கோபி, நீலமலை ஆகிய கழக மாவட்டங்களில் மொத்தம் 773 பேர் அடங்கிய பட்டியலாக நீண்டது.

அப்போது, அந்தந்த மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களுடன் பட்டியலை கழகத் தலைவரிடம் வழங்கிய போது மேடை கொள்ளவில்லை. கர வொலி அரங்கெங்கும் எதிரொலித்தது.

அது ஓய்வதற்குள், மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, பழனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை புறநகர், மதுரை மாநகர், தேனி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், இராமநாதபுரம், அறந்தாங்கி என 18 மாவட்டங்கள் இணைந்து 494 பேர் அடங்கிய அறப்போராட்டக்கள வீரர்கள் பட்டியலைக் கழகத் தலைவரிடம் அதே பரபரப்புடன் ஒப்படைத்தார்.

திராவிடர் கழகம்

அடுத்ததாக, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கடலூர், புதுச்சேரி என ஒரு மாவட்டம் ஒரு யூனியன் பிரதேசம் ஆகிய இரண்டுக்குமாக 31 போராட்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து, மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தென் சென்னை, வடசென்னை, திரு வொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர்  ஆகிய 10 மாவட்டங்கள் இணைந்து 200 போராட்டக் கள வீரர்கள் அடங்கிய பட்டியலை வழங்கினார்.

அடுத்ததாக, மாநில ஒருங்கி ணைப்பாளர் தருமபுரி ஊ.ஜெயராமன் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர், சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு என ஒன்பது மாவட்டங்களுக்கு மொத்தம் 208 அறப் போராட்டக் கள வீரர்களைக் கழகத் தலைவரிடம் வழங்கினர்.

குறுகிய நேரத்தில் இந்தக்காட்சிகள் நடந்து முடிந்துவிட்டாலும், மாநிலம் முழுவதுமிருந்து வந்த பொறுப்பாளர்கள் மேடையில் ஏறி கழகத் தலைவரிடம் ஆசையாசையாக பட்டியலை வழங்குவதும், ஒளிப்படங்கள் எடுத் துக்கொள்வதும், அடுத்த மாவட்டத் தோழர்கள் அடுத்தடுத்து மேடையில் ஏறி தங்களது பட்டியலை வழங்குவதில் காட்டிய ஆர்வத்தாலும் கழகத் தலைவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித்தான் போய்விட்டார். தோழர்களின் அந்த ஆர்வத்தைத் தமிழ்நாட்டில் பதவிக்காக சிலர் படும் பாட்டை ஒப்பிட்டுப் பார்த்து, ஒரேயடியாக சலித்துக்கொள்ள வேண்டியதில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்குத்தான், ‘‘இதோ! இருக்கிறது இளைஞர் பட்டாளம்’’ என்று ஆறுதலைக் கொடுத்தது. ஒருவழியாக அந்நிகழ்ச்சி முடிந்தது.

இறுதியில் பட்டியல் சரிபார்க்கப் பட்டது. முடிவைத் தலைவரே அறி வித்தார். அதுவும், ‘‘மகிழ்ச்சியான செய்தி” என்று குறிப்பிட்டுவிட்டே அறிவித்தார். அதைக் கேட்டு அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. கேட்டது 1000 இளைஞர்களைத்தான்! கிடைத்தது 1706. இதுவும் முதல் கட்டம்தான். விரைவில் கழகத் தலைவர் கேட்டதை இரண்டு மடங்காக்குவார்கள் தோழர்கள். போராட்டக் களத்துக்கு, தலைவரின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களின் பட்டி யல்தான் அது! முதியவர்களிலேயே முதிர்ந்தவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு வயது 104. அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது பொதுக்குழுவில். செய்தவர் கழகத் தலைவர்! அவருக்கு வயது 93. 104 வயதுக்காரர் சொல்கிறார். ‘‘என்னையும் அந்தப்பட்டியலில் முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார். கேட்டவர்களுக்கு மயிர்க் கூச்செரிந்துவிட்டது. இதற்குப் பின்னரும் ‘இனமலர்கள்’ சூடு சுரணை இல்லாமல் துள்ளத்தான் செய்யும். காலப்போக்கில்… அந்த மலரின் இதழ்கள் ஒவ்வொன்றாக அவாள்கள் பதறப் பதற உதிர்ந்தே தீரும். இதுவும் காலத்தின் கட்டாயம்தான்.

திராவிடர் கழகம் என்றால் வெறும் சொல் அன்று! செயல்! அதை நிறுவும் வகையில்தான், இந்த இளைஞர்களின் பட்டியல்! இந்த இளைஞர்கள், தலைமை ‘எள்’ என்றால், ‘எள்ளாக’ மட்டுமே நிற்கக்கூடியவர்கள். திராவிடர் கழகம் இந்த இளைஞர்களுக்குக் கொள்கைப் பயிற்சிகள் வழங்கி, சமூகத்தில் இருக்கும்  போதைகளிடமிருந்து இளை ஞர்களைக் காப்பாற்ற வேண்டிய தன் வரலாற்றுக்கடமையை நிச்சயம் ஆற்றும்.

கழகத் தலைவரின் ஆணையேற்று, சிறைக்கு அஞ்சாமல் அறப்போராட்டக் களத்தில் முன்நிற்கும்! திராவிடம் வெல்லும்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *