குரூப்-1 காலிப்பணியிடங்களை 200 ஆக உயர்த்த வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் பெருமன்றம் கடிதம்!

1 Min Read

சென்னை, ஜூலை 3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்விற்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, இந்திய கம்யூனிஸ்ட் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் கடிதம் எழுதியுள்ளார்.

இளைஞர்களின் நம்பிக்கை: ஏழை, எளிய இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மிகப்பெரிய வாழ்வாதார நம்பிக்கையாக இருந்து வருகின்றன.  நடப்பாண்டு குரூப்-1 தேர்வுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக, வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக்குறுதிக்கு மாறானது: ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அரசாக தவெக செயல்படும், காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்’ என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு, தற்போதைய இந்த அறிவிப்பு முற்றிலும் நேர்மாறாக அமைந்துள்ளது.எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, குரூப்-1 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரித்து தேர்வை நடத்துமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *